இழந்த வாய்ப்புகளை பெற முன்னணி நடிகையுடன் ஜோடி சேரும் ஜெய் : தக்கவைத்துக்கொள்வாரா?

இழந்த வாய்ப்புகளை பெற முன்னணி நடிகையுடன் ஜோடி சேரும் ஜெய் : தக்கவைத்துக்கொள்வாரா?
  • PublishedApril 7, 2023

சுமார் 9 வருடங்களுக்கு பிறகு நடிகை நயன்தாரா, மீண்டும் இளம் ஹீரோவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நயன்தாரா ஜெய்யின் ஜோடி பொருத்தம் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருந்தது. அந்த க்யூட்டான ஜோடி தான் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

நயன்தாரா நடிக்கும் 75 ஆவது திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். நிலேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

nayanthara-jai-movie

ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த ஜெய் இடையில் சொல்லிக் கொள்ளும் படியான வெற்றி படங்கள் எதுவும் கொடுக்கவில்லை. அதனால் வில்லனாக கூட அவர் ஒரு திரைப்படத்தில் நடித்துப் பார்த்தார்.

அதுவும் கைக்கொடுக்கவில்லை. இறுதியாக வந்த காபி வித் காதல் படமும் தோல்வியை தழுவியது. இந்நிலையில், எப்போதும் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவுடன் ஜோடி சேருவதன் மூலம், இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க ஜெய் திட்டமிட்டுள்ளார் போலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *