விஜய் சேதுபதியை பின்பற்றும் ஜெய் : அதுக்கும் டெரர் ஃபேஸ் வேணுமில்ல என்று புலம்பும் ரசிகர்கள்!
நடிகர் ஜெய்யின் நடிப்பில் தீரா காதல் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
கடந்த சில காலமாக தோல்வி படங்களைக் கொடுத்துவந்த ஜெய்யிற்கு இந்த தீராக காதல் படம் நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இந்த படத்தை அடுத்து நயன்தாரா படத்தில் நடிக்க இருக்கிறார். அத்துடன் ஒரு நிகழ்ச்சி மேடையில் தீரா காதல் இயக்குனரிடம் இதுதான் சமயம் என்று இவருக்கு இருந்த ஆசையை சொல்லிவிட்டார்.
அதாவது அஜித்தை வைத்து அடுத்து படம் எடுத்தால் எனக்கு கண்டிப்பாக வில்லன் வாய்ப்பு வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டார்.
அதே மாதிரி தற்போது வெங்கட் பிரபு மற்றும் விஜய் இணைய போகும் படத்தில் கண்டிப்பாக இவருக்கான வாய்ப்பை கேட்டு பெறுவார். அதே மாதிரி இவர் நினைத்தால் அந்த படத்தில் எந்தவிதமான கேரக்டரையும் வாங்கிவிடலாம்.
ஏனென்றால் ஏற்கனவே விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்திருக்கிறார். அதே மாதிரி விஜய்யுடன் எப்படியாவது மறுபடியும் நடித்து விட வேண்டும் என்று ஆசையுடன் இருக்கிறார்.
அதுவும் சாதாரண கேரக்டர் இல்லை வில்லனாக நடிக்கணும் என்று வெங்கட் பிரபுவுடன் கூறி இருக்கிறார். இதனால் கண்டிப்பாக விஜய் படத்தில் இவருக்கு வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி போகும் இடமெல்லாம் பெரிய நடிகர்களுக்கு வில்லனாக மாற வேண்டும் என்ற ஆசையில் பிடிவாதமாக இருக்கிறார். அதுவும் எல்லா நடிகருக்கும் கிடையாது பெரிய நடிகர்களின் படத்தில் மட்டும் தான். அதுக்கும் ஒரு டெரர் ஃபேஸ் வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.