“ஜீனி”.. வெளியானது ஜெயம் ரவி படத்தின் பர்ஸ்ட் லுக்!

“ஜீனி”.. வெளியானது ஜெயம் ரவி படத்தின் பர்ஸ்ட் லுக்!
  • PublishedMarch 24, 2024

நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். இருந்தபோதிலும் அவரது இறைவன் உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது.

எனினும் அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. அதில் ஜீனி படமும் ஒன்று.

இந்த படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பேன்டசி திரில்லராக ஜீனி படம் உருவாகியுள்ளது. படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, கிருத்தி ஷெட்டி, தேவயாணி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர், அடுத்தடுத்து காதலிக்க நேரமில்லை, பிரதர் உள்ளிட்ட ஜெயம் ரவியின் படங்களும் ரிலீசுக்கு காத்திருக்கின்றன, இந்த ஆண்டிலேயே அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீனி படம் அவருக்கு சிறப்பாக கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *