தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர்.. சூட்டிங் எப்ப தெரியுமா?

தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர்.. சூட்டிங் எப்ப தெரியுமா?
  • PublishedMarch 24, 2024

நடிகர் ரஜினிகாந்த் தற்போது டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவல் நிறைவடையவுள்ளது. சமூக அக்கறையுடன் இந்தப் படத்தின் கதைக்களத்தை ஞானவேல் உருவாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த மாதத்திலேயே தலைவர் 171 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் மே அல்லது ஜூன் மாதத்தில் தான் துவங்கும் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் அவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு அடுத்தடுத்த விஷயங்களை படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றன .

இந்த படத்தின் டைட்டில் டீசர் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தமிழ் புத்தாண்டையொட்டி தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திலேயே இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்களும் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில் படத்தில் பல பான் இந்தியா நடிகர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் லோகேஷ் கனகராஜூம் உறுதிப்படுத்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை தன்னுடைய தலைவர் 171 படத்தில் வித்தியாசமாக காட்டவுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருநதார். இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *