ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் திருப்பதியில் என்ன செய்றாங்கனு நீங்களே பாருங்க…

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் திருப்பதியில் என்ன செய்றாங்கனு நீங்களே பாருங்க…
  • PublishedMarch 25, 2024

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் திருப்பதியில் என்ன

பாலிவுட் சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் படிக்கட்டில் முட்டிப்போட்டுக்கொண்டு ஏறி தனது வேண்டுதல் நிறைவேற்றினார்.

50 முறை திருப்பதிக்கு வந்து இருக்கிறேன், திருப்பதி பாலாஜி எனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நான் முழங்காலில் படிகளில் ஏறினேன் என்றார்.

ஸ்ரீதேவி – போனி கபூரின் வாரிசான ஜான்வி கபூரும் தனது அம்மாவைப் போல நடிகையாக கலக்கி வருகிறார். அம்மா ஸ்ரீதேவியைப்போலவே அவரிடமும் அனைத்து அழகும் கொட்டிகிடக்கிறது.

இவர், இந்தியில் 2018ம் ஆண்டு ரிலீஸான தடாக் திரைப்படம் மூலம் அறிமுகமான ஜான்வி, அடுத்தடுத்து கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, மிலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஏழுமலையானின் தீவிர பக்தையான ஜான்வி கபூர் திருப்பதி ஏழுமலையார் கோவிலில் தனது பிறந்த நாளை கொண்டாடினர். அவர் தனது சகோதரி குஷி கபூர் மற்றும் தனது ஆண் நண்பர் ஷிகர் பஹாரியாவுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது ஷிகர் பஹாரியா ஜான்வியின் காதலர் என்று இணையத்தில் செய்தி பரவியது. தற்போது மீண்டும் ஜான்வி கபூர், ஷிகர் பஹாரியா மற்றும் நண்பன் ஒரி ஆகியோருடன் திருப்பதியி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதில், ஜான்வி வேண்டுதலுக்காக திருப்பதி மலையேறும் படிக்கட்டில் முட்டிப்போட்டு நடந்து சென்றுள்ளார்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜான்வி, நான் இதுவரை கிட்டத்தட்ட 50 முறை திருப்பதிக்கு வந்து இருக்கிறேன். பாலாஜி எனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நான் முழங்காலில் படிகளில் ஏறினேன் என்றார். இது வாழ்க்கையின் இலக்கினை சொல்லித் தருவது. இது முன்னேறுவதைப் பற்றியது.அனைவரும் திருப்பதி மலை ஏறும் அனுபவத்தை அனுபவிக்க வேண்டும். ஏனென்றால், அது உங்களை பணிவுடன் நினைக்க வைக்கும் என்றார். அப்போது உடன் இருந்த ஷிகர், இதில் நான் நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் மேலே பார்த்தாலும் பயப்படுவீர்கள், கீழே பார்த்தாலும் பயப்படுவீர்கள். எனவே உங்களுக்கு மேல் இருக்கும் ஒரு படியில் மட்டும் கவனம் செலுத்துக்கள் என்றார்.

செய்றாங்கனு நீங்களே பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *