என்ன மறுபடியும் கல்யாணமா? போஸ்ட் போட்ட வனிதா… 18 வயசுல இப்படியா?

என்ன மறுபடியும் கல்யாணமா? போஸ்ட் போட்ட வனிதா… 18 வயசுல இப்படியா?
  • PublishedMarch 25, 2024

நடிகை “வனிதா விஜயகுமார்” தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். இதன்போது வனிதாவிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு வனிதாவும் தாறுமாறாக பதிலளித்துள்ளார். இதில் ரசிகர் ஒருவர், “உங்களுக்கு அடுத்த கல்யாணம் எப்போ…?” என்று கேட்க அதற்கு வனிதா, “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்று வனிதா பதில் கொடுத்து இருக்கிறார்.

மேலும், “உங்களுடைய மகன் அல்லது உங்கள் அப்பா இருவரில் யாரை உங்களுக்கு பிடிக்கும்” என்று கேட்ட கேள்விக்கு, “என்னை யாருக்கு பிடிக்கிறதோ அவரை எனக்கு பிடிக்கும்” என்று அதிரடியான பதிலை கொடுத்திருந்தார்.

அதுபோல இன்னொரு ரசிகர், “ஜோவிகாவின் வயது என்ன?” என்று கேட்க அதற்கு “18 “என்று சொல்லி இருக்கிறார்.

அது அடுத்ததாக இன்னொரு ரசிகர், “உங்களுடைய நெட்வொர்த் எவ்ளோ?” என்று கேட்க அதற்கு வனிதா “இன்டர்நெட் வொர்த் தான்” என்று நக்கலாக பதில் கொடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து இன்னொரு ரசிகர், “எப்போ நெக்ஸ்ட் கல்யாணம்? சொல்லுங்க.. மறக்காம இன்வைட் பண்ணுங்க..” என்று சொல்ல அதற்கு வனிதா, “தமிழ்நாட்டையே இன்வைட் பண்றேன். போஸ்டர் அடிச்சு நியூஸ் கொடுக்கிறேன்” என்ற பதிலோடு ஹார்டின் கொடுத்திருக்கிறார்.

அடுத்ததாக இன்னொரு ரசிகர், “உங்களுக்கு லைஃப்ல இதுக்கு அப்புறம் என்ன பண்ணனும்? அதே போல நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடந்த 10 வருடத்தில் பண்ணுன பெரிய மிஸ்டேக் என்றால் என்ன?” என்று கேட்க அதற்கு வனிதா, “நான் எதில் எல்லாம் ரீடேக் எடுக்கிறேனோ அது தான் என்னுடைய பெஸ்ட் மிஸ்டேக்” என்று சொல்லி இருக்கிறார். அதுபோல “உங்களுக்கு வர்ற நெகட்டிவிட்டியை நீங்கள் எப்படி ஹேண்டில் பண்றீங்க” என்று கேட்ட ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் “விஜய்”யை டேக் செய்து “இக்னோர் நெகட்டிவிட்டி” என்று அதில் ஹேஸ்டேக் கொடுத்திருக்கிறார்.

அதுபோல இன்னொரு ரசிகர், “ஹாய் அக்கா, யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை.. யாரும் இல்லை என்றுலாம் பீல் பண்ணாதீங்க… நீங்க பண்ண மாட்டீங்க என்று எங்களுக்கு தெரியும். ஆனாலும் உங்க கட்ஸ் எனக்கு புடிச்சிருக்கு” என்று ஒரு ரசிகர் வனிதாவை பாராட்ட, அதற்கு வனிதா, “தமிழ்நாடும், தமிழ் மக்களும்.. அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கிறான்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இப்படியாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வனிதா அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *