ராதிகாவை கட்டிப்பிடித்து KISS கொடுத்த நடிகர்… சரத்குமார் என்ன செய்தார் தெரியுமா?

ராதிகாவை கட்டிப்பிடித்து KISS கொடுத்த நடிகர்… சரத்குமார் என்ன செய்தார் தெரியுமா?
  • PublishedMarch 25, 2024

நடிகை ராதிகாவை பொது மேடையில், 63 வயது நடிகர் ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நிலையில், இதற்கு சரத்குமார் ரியாக்ட் செய்தது பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.

சரத்குமாருக்கும் – ராதிகாவுக்கும் இருந்த நட்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. 2001-ஆம் ஆண்டு முதல் சந்தோஷமான தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். பல விஷயங்களில் இவர்களும் உள்ள புரிதல்… இளம் நட்சத்திர ஜோடிகளுக்கு ஒரு பாடமாக அமைகிறது என சிலர் நேரடியாகவே கூறி உள்ளனர். மேலும் ராதிகா – சரத்குமாருக்கு ராகுல் என்கிற மகன் ஒருவரும் உள்ளார்.

சென்றமுறை நடந்த சட்டமன்ற தேர்தலில்… கணவர் சரத்குமாரை வெற்றிபெற வைக்க, திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் இருந்து முழுமையாக விலகி தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதை தொடர்ந்து தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில், ராதிகா விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

ராதிகாவை வெற்றிபெற வைக்க வேண்டும் என சரத்குமார் தீவிரம் காட்டி வரும் நிலையில் , இவர்களின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பட விழா ஒன்றில் கலந்து கொண்ட போது… மேடைக்கு வந்த நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா சரத்குமாருக்கு கை கொடுத்து விட்டு, ராதிகாவை மட்டும் கட்டிப்பிடித்து ஃபார்மலாக முத்தம் கொடுத்தார்.

இதை பார்த்த சரத்குமார் பாலகிருஷ்ணாவுக்கு தன்னுடைய கையில் இருந்த மைக்கை அவருக்கு கொடுக்காமல், அவங்களை மட்டும் கட்டிப்பிடித்து வரவேற்கும் நீங்கள்… எனக்கு மட்டும் கை கொடுப்பது நியாயமா என கேட்க… அதற்கு சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்ட பாலகிருஷ்ணா, அவரையும் கட்டி பிடித்து வரவேற்றார்.

மேலும் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து, சரத்குமார் தன்னுடைய மனைவியை கட்டிப்பிடித்த 63 வயது நடிகர் மீது எந்த ஒரு கோபமும் இல்லாமல்… இப்படி கிண்டலாக பேசியது இவர்கள் இருவரிடம் உள்ள நல்ல புரிதலை காட்டுவதாக கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *