பேட்டி ஒன்றில் பல விஷயங்களை போட்டுடைத்தார் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவியின் கதை தேர்வுகள் அடுத்தடுத்து அவருக்கு வெற்றிகளை கொடுத்து வருகிறது. அவரது படங்கள் ரசிகர்களுக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் கடந்த ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் இரண்டுமே வித்தியாசமான ஜானர்களில் வெளியாகின.
இந்த படங்களில் இறைவன் படம் அவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை என்ற போதிலும் அவரது கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் இன்னும் சில தினங்களில் அவரது சைரன் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கான பிரமோஷன்களில் அடுத்தடுத்து பேட்டிகளை கொடுத்து வருகிறார் ஜெயம் ரவி.
சைரன் படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தன்னுடைய பேட்டிகளில் கூறி வருகிறார். படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் காம்பினேஷன் இந்த படத்திற்கு சிறப்பான அட்ராக்ஷனை கொடுக்கும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த படத்தின் இரண்டு பாடல்கள் லிரிக்ஸ் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கலந்துள்ளன. ஜிவி பிரகாஷ் இசையும் இந்த படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய ப்ரோமோஷன்களில் தான் அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள் குறித்த பல தகவல்களையும் ஜெயம் ரவி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக அவரது நடிப்பில் பிரதர், ஜெனி ,காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்கள் உருவாகி வருவது குறித்து பேசிய ஜெயம் ரவி, இதில் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் பிரதர் படம் குறித்தும் தன்னுடைய ஷேரிங்கை பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் எம் ராஜேஷ் துவக்கத்தில் தன்னுடைய படங்களில் குடும்ப செண்டிமட்டை அதிகமாக வைத்து காமெடியையும் சேர்த்து இயக்கி வந்ததை குறிப்பிட்ட ஜெயம் ரவி, தொடர்ந்து அவரது படங்களில் காமெடி தூக்கலாக இருக்கும்படி மாறிவிட்டதாகவும் கூறினார்.
இந்நிலையில் பிரதர் படத்தில் மீண்டும் குடும்ப சென்டிமென்ட் அதிகளவில் ராஜேஷ் சேர்த்துள்ளதாகவும் இந்த படம் மிகச் சிறப்பான முறையில் ஒர்க் அவுட் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள ஜெயம் ரவியின் சைரன் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.
இந்த படத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் கைதி என இரு வேறு கெட்டப்புகளில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்த படத்தில் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் உள்ளிட்ட பல விஷயங்களையும் இயக்குநர் சேர்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.