திருப்பதி கோயிலுக்கு தங்கச்சிலை போன்று வந்த ஜான்வி கபூர்… வைரலாகும் வீடியோ

திருப்பதி கோயிலுக்கு தங்கச்சிலை போன்று வந்த ஜான்வி கபூர்… வைரலாகும் வீடியோ
  • PublishedJanuary 5, 2024

ஜூனியர் என்டிஆர் ஜோடியாக தேவரா படத்தில் நடித்துள்ள ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அந்த படத்தின் கிளிம்ப்ஸ் காட்சி வெளியாவதை முன்னிட்டு இன்று திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

கூட சென்றவர்கள் பாதுகாப்பு அளிக்கும் விதமாக ஜான்வி கபூர் நடந்து செல்வதற்காக பாதையை கிளியர் செய்ய பார்த்த போது, ஜான்வி கபூர் பண்ண விஷயங்கள் வீடியோவாக வெளியாகி தீயாக பரவி வருகின்றன.

திருப்பதியில் லட்டுக்கு பதிலாக என்ன திடீரென ஜாங்கிரி இருக்கே என ரசிகர்கள் #DevaraGlimpse ஹாஷ்டேக்கில் ஜான்வி கபூர் திருப்பதிக்கு விசிட் அடித்ததை வைத்து வர்ணித்து வருகின்றனர்.

ஜான்வி கபூர் செல்லும் போது அவரை சூழ்ந்து கொண்டு பத்திரிகையாளர்கள் புகைப்படக் கலைஞர்கள் போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்து வரும் நிலையில், சிலர் அவர்களை தள்ளி விட, அவங்களை தள்ளி விடாதீர்கள் ப்ளீஸ் என பதறிப் போய் ஒருவரை தூக்கிவிட ஜான்வி கபூர் ஓடும் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

கடந்த ஆண்டு இறுதியில் பிரபாஸின் சலார் படம் மட்டுமே டோலிவுட்டுக்கு பெரிய படமாக அமைந்த நிலையில், இந்த ஆண்டு ஜூனியர் என்டிஆரின் தேவரா, மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் என வரிசையாக தெலுங்கு சினிமாவிலும் பெரிய படங்கள் வரிசை கட்டி ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *