ஜிம்மில் தலைகீழாக தொங்கும் ஜோ : இவுங்க சூர்யாவிற்கு டப் கொடுப்பாங்க போல!
நடிகை ஜோதிகா தனது 2D என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் சில படங்களை நடித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு மீண்டும் சினிமாவில் வாய்ப்புகள் வரத்தொடங்கின.
இதற்கிடையில், தற்போது மும்பையில் வீடுவாங்கி செட்டில் ஆகியுள்ளார். இதற்கு பல நெகடிவ் விமர்சனங்களும் வரத்தொடங்கின.
இந்நிலையில், தற்போது ஜோதிகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
வயிறு மற்றும் இடுப்பு சதை பகுதிகளை குறைப்பதற்காக தலைகீழாக நிற்கும் பயிற்சியை ஜோதிகா தொடர்ந்து செய்து வரும் வீடியோக்களை ஒன்று சேர்த்து ஒரு வீடியோவாக பதிவிட்டிருக்கிறார்.
இது தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான ஜோதிகா தற்போது செய்து வரும் கடுமையான உடற்பயிற்சி பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் சினிமா வாய்ப்பின் மேல் மீண்டும் ஆசை வந்ததால் இவர் இப்போது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார் என நெகட்டிவ் விமர்சனங்களும் வருகின்றன.