சோசியல் மீடியாவை விட்டு விலகும் கஜோல் : இதுதான் காரணமா?

சோசியல் மீடியாவை விட்டு விலகும் கஜோல்  : இதுதான் காரணமா?
  • PublishedJune 12, 2023

தமிழில் நடன இயக்குனர் பிரபுதேவா உடன் இணைந்து மின்சார கனவு படத்தில் நடித்தவர்தான்  நடிகை கஜோல். தற்போது போலிவுட்டில் முன்னிண நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

இப்போது வரை ஒரு பிசியான நடிகையாக வலம் வரும் கஜோல், வெப்சீரிஸ், விளம்பரங்கள் என அனைத்திலும் தடம் பதித்துள்ளார்.

தற்போது இணையத்தில் அவரைப் பற்றிய ஒரு செய்தி பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை கஜோல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபகாலமாக இவர்களுக்குள் ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருப்பதாக ஊடகத்தில் செய்தி பரவி வந்தது. இந்த சூழலில் நேற்றைய தினம் திடீரென கஜோல் தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தார்.

அதாவது கஜோலை ட்விட்டரில் லட்சக்கணக்கானவர்களும்,  இன்ஸ்டாகிராமில் கோடிக்கணக்கானவர்களும் ஃபாலோவ் செய்து வருகிறார்கள்.

இந்த சூழலில் தற்போது தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையில் தான் இருக்கிறேன் என்று புகைப்படம் வெளியிட்டு தன்னுடைய முந்தைய பதிவுகள் எல்லாவற்றையும் நீக்கி இருந்தார்.

kajol

இதனால் கஜோல் ரசிகர்கள் குழப்பமடைந்து இருந்தனர். இப்போது அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.  டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்காக கஜோல் நடிக்கும் தி ட்ரையல் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

அதாவது தனது சமூக வலைத்தளங்களில் அதிக ஃபாலோவர்ஸ் உள்ளதால் இந்த மார்க்கெட் வித்தையை பயன்படுத்தி இருக்கிறார் கஜோல். ஒரு படத்தின் விளம்பரத்திற்காக கஜோல் இவ்வாறு செய்துள்ளது அவர் மேல் உள்ள மரியாதைக்கு இழுக்கு வரும்படி அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *