விஜயை வைத்து நெல்சன் போட்ட திட்டம் : கைக்கொடுக்குமா என்ற கேள்வியில் ரசிகர்கள்!

விஜயை வைத்து நெல்சன் போட்ட திட்டம் : கைக்கொடுக்குமா என்ற கேள்வியில் ரசிகர்கள்!
  • PublishedJune 12, 2023

பீட்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் ஜெய்லர் படத்தை இயக்கியுள்ளார். சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என ஒரு மிகப் பெரிய பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகவுள்ளது. இதற்கிடையே பீட்ஸ் திரைப்படத்தின் மோசமான விமர்சனங்கள் நெல்சனுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.  இதனால் ஜெயிலர் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைக்குமா என்ற நிலையே அப்போது இருந்தது. ஆனால் ரஜினி தான் எடுத்த முடிவிலிருந்து பின் வாங்காமல் நெல்சனை கைவிடவில்லை.

இப்போது ஜெயிலர் ரிலீஸ் தேதி நெருங்குவதால் நெல்சன் உச்சகட்ட பயத்தில் உள்ளார். இந்தப் படமும் சொதப்பிவிட்டால் தலை தப்பாது என்ற நிலையில் இருக்கிறார்.

ஆகையால் படத்தின் பிரம்மாண்ட பிரமோஷன் கண்டிப்பாக அதிக வசூலை பெற்று தரும். இப்போது நெல்சனுக்கு கை கொடுக்க ஜெயிலரில் இறங்கி உள்ளார் தளபதி விஜய்.

அதாவது நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக தளபதி விஜய் கலந்து கொள்ள இருக்கிறாராம். விஜயை வைத்து இந்த படத்திற்கான புரமோஷனை நெல்சன் மேற்கொண்டுள்ளதாக விமர்சனம் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *