கமல் சம்பாதித்த பணத்தை சரியாக வைத்துக் கொள்ளவில்லை : ரஜினியின் கருத்திற்கு கமல் கொடுத்த பதிலடி!

கமல் சம்பாதித்த பணத்தை சரியாக வைத்துக் கொள்ளவில்லை : ரஜினியின் கருத்திற்கு கமல் கொடுத்த பதிலடி!
  • PublishedJune 2, 2023

நடிகர்  கமலின் படங்கள் வித்தியாசமாகவும் அவருடைய நடிப்பு சாதாரணமாகவும் இருக்காது. படத்துக்கு படம் ஏதாவது ஒரு கருத்தை சொல்லும் விதமாக எடுப்பதில் அவருக்கு நிகர் அவரே என்றுதான் சொல்லவேண்டும்.

இவருடைய முக்கிய நோக்கமே படத்தில் வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பதை தவிர பணம் சம்பாதிக்கும் நோக்கம் இருக்காது. இதைப்பற்றி ரஜினி ஒரு வீடியோவில் வருத்தத்துடன் சொல்லி இருக்கிறார்.

அதாவது இப்ப வருகிற ஆர்டிஸ்ட்களை விட கமல் சம்பாதிக்கும் பணம் மிகவும் கம்மிதான். அத்துடன் சம்பாதித்த பணத்தை சரியாக வைத்துக் கொள்ளவில்லை என்பதும் உண்மை என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

ஆனால் அதற்கு பதில் அளிக்கும் விதமாக கமல் கூறியது சம்பாதிக்கிற பணத்தை நான் சினிமாவில் தான் போடுகிறேன் என்று பல பேர் சொல்லி இருந்தாலும் அதை நான் கம்பீரமாகவே செய்வேன்.

ஏனென்றால் விவசாயி வேற என்ன பண்ணுவான் அவனுக்கு வர லாபத்தை அதில் தான் போட தெரியும். அதே மாதிரி தான் நானும் சினிமாவில் வரும் லாபத்தை சினிமாவில் தான் போடுவேன் என்று பதில் அளித்திருக்கிறார். தற்போது கமலுடைய இந்த கருத்து வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *