கோபியை பிரிய நினைக்கும் ராதிகா : பாக்கிய லெட்சுமி சீரியலில் அடுத்து வரபோகும் முக்கிய திருப்பம்!

கோபியை பிரிய நினைக்கும் ராதிகா : பாக்கிய லெட்சுமி சீரியலில்  அடுத்து வரபோகும் முக்கிய திருப்பம்!
  • PublishedJune 2, 2023

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில்,  கோபி ராதிகா இடையே பல பிரச்சனைகள் வர,  அவர்களுக்கு நடுவே மயூரா மாட்டிக் கொள்கிறார். அதனால் பாக்கியா மயூரா மீது பாசமாக இருக்க,  பாக்கியாவின் நல்ல குணம் ராதிகாவுக்கு புரிய வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் வருகிறது. இருந்தாலும் ராதிகாவும் பாக்கியாவும் அதனை சமாளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராதிகாவிடம் ஈஸ்வரி சண்டை போட்டுக் கொண்டே இருக்க  ராதிகாவின் அம்மா என்ட்ரி கொடுக்கிறார். ஆனால் யாரும் மயூராவை பற்றி நினைக்கவே இல்லை. ராதிகா அம்மா பாக்கியா வீட்டிற்கு வர மயூரா பாவமாக வெளியே நிற்கிறார்.

இந்நிலையில் மயூராவின் பரிதாபமான நிலையை பார்த்து பாக்கியா இரக்கப்படுகிறார். அவர் இனியாவிற்கு என்ன செய்தாலும் அதை மயூராவிற்கும் செய்கிறார். பாக்கியா மயூராவை பார்த்துக் கொள்ளும் விதத்தை வைத்து பாக்கியாவின் நல்ல குணம் ராதிகாவுக்கு தெரிய வருகிறது.

அதனால் ராதிகா இனிமேல் பாக்கியா வாழ்க்கையில் குறுக்கே நிற்க கூடாது என நினைத்து கோபியை பிரிய முடிவு செய்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *