சினிமாவை காட்டிலும், பிஸ்னசில் அதிகம் லாபம் பார்க்கும் லேடி சூப்பர் ஸ்டார்!

சினிமாவை காட்டிலும், பிஸ்னசில் அதிகம் லாபம் பார்க்கும் லேடி சூப்பர் ஸ்டார்!
  • PublishedApril 25, 2023

ஹீரோவுக்கு இணையாக அதிகமான ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்ட நடிகை என்றால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மட்டும்தான். தற்போது ஏனோ இவருடைய நடிப்பில் வெளியாகிய பட்ஙகள் சரியாக ஓடவில்லை.

தற்போது பாலிவுட்டில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேநேரம் திருமணம், பிள்ளைகள் என படு பிஷியாக இருக்கிறார்.

இதற்கிடையில் சினிமாவை தாண்டி நயன்தாரா, பிஸினசிலும், அதிகம் லாபம் பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, முதலாவதாக துபாயில் எண்ணெய் சம்பந்தப்பட்ட தொழிலில் 50 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளார். இதனை அடுத்து அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தில் ‘தி லிப் பாம் கம்பெனி’ போன்ற தொழில்களில் ஈடுபட்டு அதன் பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார்.

இந்த நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்ததாக இந்தியாவில் மிகப் பிரபலமான ‘சாய் வாலே’ என்ற தேநீர் கடையில் முதலீடு செய்து உள்ளார்.

இது மட்டுமில்லாமல் இறைச்சி சம்பந்தமான ஒரு தொழிலிலும் முதலீடு செய்திருக்கிறார். இப்படி சினிமாவில் சம்பாதித்த அனைத்து லாபத்தையும் தெளிவான முறையில் எதிர்காலத்துக்காக பிசினஸில் இன்வெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறார்.

இதன் மூலம் நயன்தாராவுக்கு மாதம் 10 லிருந்து 15 கோடி வரை லாபம் வருகிறது. ஒரு வருடத்திற்கு மட்டுமே 100 கோடிக்கு மேல் சம்பாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *