நடிப்பதை நிறுத்திவிட்டார் சர்ச்சை நாயகன் மன்சூர் அலிகான்… காரணம் “மோடி”தான்..
பிரதமர் நரேந்திர மோடி நடிக்க தொடங்கிவிட்டதால் இனி இங்கு நமக்கென்ன வேலை என நினைத்து நான் நடிப்பதை நிறுத்துக் கொண்டேன் என நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் நேற்று தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகான் இவ்வாறு பேட்டி அளித்திருந்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
“வரும் மக்களவைத் தேர்தலில் நான் வேலூரில் போட்டியிடுகிறேன். கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அதனால் என்ன போட்டியிட போகும் தொகுதி தெரிந்து விட்டது. அதனால் எனது தேர்தல் பணியை நான் தொடங்கிவிட்டேன்.
இந்த நாட்டை பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சி செய்து மக்களுக்கு என்ன செய்து விட்டார்கள். நாட்டையே விற்று குஜராத்தின் காலடியில் போட்டுவிட்டதுதான் மிச்சம். பிரதமர் மோடி சரியாக இந்த நாட்டை ஆட்சி செய்தால் நான் ஏன் தேர்தலில் போட்டியிட போகிறேன்.
இந்த வேலூரில் வந்து உங்களுக்கு கும்பிடு போட போகிறேன்? பிரதமர் மோடியே ஹீரோ, வில்லன், பப்பூன் உள்ளிட்ட வேடங்களை போட்டுவிட்டார். அதனால்தான் நான் நடிப்பை நிறுத்திவிட்டு மக்களுக்கு பணியாற்ற வந்திருக்கிறேன்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் பெரிய நடிகர்தான். அவரது விஷ்வகுரு மோடியும் நடிகர்தான். 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சுவாசிக்கும் காற்றை தவிர மற்ற அனைத்திற்கும் வரிதான்.
விமான நிலையத்தையும் துறைமுகத்தையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டால் அவன் எதை எதையோ கொண்டு வருவான் . தமிழக மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள். இதனால் தமிழக மக்களை எப்போதும் போதையில் வைத்திருக்கத்தான் குஜராத்திலிருந்து போதையை சப்ளை செய்கிறது பாஜக” என மன்சூர் அலிகான் பேசியிருந்தார்.