சீரியல் நடிகைகளை திருமணம் செய்வது தவறு – மிர்ச்சி செந்திலின் பரபரப்பு பேட்டி!
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் ஆன சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்த மிர்ச்சி செந்தில், அந்த சீரியலில் கதாநாயகியாக மீனாட்சி என்ற கேரக்டரில் நடித்த நடிகை ஸ்ரீஜாவை கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இந்நிலையில் மிர்ச்சி செந்தில் தன்னுடைய மனைவியும் சீரியல் நடிகையுமான ஸ்ரீஜாவை குறித்து பல விஷயங்களை புட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
அதாவது இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் செய்யும் மகா தவறு என்னவென்றால் அவர்கள் யாருடன் இணைந்து நடிக்கிறார்களோ அந்த கேரக்டர் போன்று தான் அந்த பெண் இருப்பார் என்கின்ற நினைப்பில் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
அப்படிதான் நானும் சரவணன் மீனாட்சி தொடரில் ஸ்ரீஜாவையும் மீனாட்சி ஆகவே பார்த்துவிட்டேன். அந்த சீரியலில் எதுத்து பேசாமல் அமைதியாக கோபப்படாமல் மாமியார் சொல்வது எல்லாம் அப்படியே கேட்பார் என நினைத்து தான் நானும் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அது எல்லாம் மீனாட்சி என்ற கதாபாத்திரத்திற்கு உரிய கேரக்டர்தான்.
இதை நான் கல்யாணத்திற்கு பிறகு தான் புரிந்து கொண்டேன். நான் ஏதாவது சொன்னால் நீ என்ன எனக்கு சொல்வது என்று பிடிவாதம் பிடிக்க கூடியவர். ஸ்ரீஜா எடுக்கிற முடிவில் ஆணித்தரமாக இருப்பார்.
யாருக்காகவும் அதை மாற்றிக் கொள்ள மாட்டார்இ அதற்காக வேலிட் பாயிண்ட் ஒன்றையும் வைத்துக் கொள்வார். நம்மை விட ரொம்பவே புத்திசாலித்தனமாக யோசித்து செயல்படுவார். சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சி அப்படி கிடையாது. நான் அந்த மீனாட்சியை தான் விரும்பினேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு எனக்கு வேறு விதமாக அமைந்தது எனத் தெரிவித்துள்ளார்.