முக்கிய நடிகர்களின் சாவுக்கு கூட போகாத வடிவேலு : மீசை ராஜேந்திரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு!

முக்கிய நடிகர்களின் சாவுக்கு கூட போகாத வடிவேலு : மீசை ராஜேந்திரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு!
  • PublishedJune 13, 2023

நகைச்சுவை மன்னன் வடிவேலு பற்றி சமீப காலமாக பல விமர்சனங்கள் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

குறிப்பாக தன்னோடு பணிப்புரிபவர்களை இவர் நடத்தும் விதம் குறித்து உடன் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது மீசை ராஜேந்திரனும் வடிவேலு பற்றி சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதாவது,  சக நடிகர்களின் வளர்ச்சியை பிடிக்காமல்,  தன் உதவியை எதிர்பார்க்கும் அளவிற்கு இருப்பவர்களை தான் தன்னிடம் வைத்திருப்பாராம்.

சற்று எதிர்த்து பேசினால் இனி நீ வேலைக்கு ஆக மாட்டாய் என்று கூறி திருப்பி அனுப்பி விடுவாராம். அவ்வாறு இவர் மேற்கொண்ட இத்தகைய செயல்தான் சினிமாவில் இவர் மார்க்கெட்டை இழக்கச் செய்தது.

பார்ப்பவர்கள் இவரா இது என கேட்கும் அளவிற்கு வெளிவேஷம் போடுவதில் வல்லவர் எனவும் மீசை ராஜேந்திரன் வடிவேலுவை வன்மையாக சாடியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடன் பயணித்த நகைச்சுவை நடிகரான விவேக்கின் வளர்ச்சியை பிடிக்காமல் அவர் இறப்புக்கு பின் அவர் சாவுக்கு கூட செல்லாத கொடுமைக்காரராக இருக்கிறார். மேலும் அதன்பின் ஊரே போற்றிய மயில்சாமியின் சாவுக்கு கூட போகவில்லை.

சமீபத்தில் இறந்த மனோபாலாவின் இறப்பிற்கும் இவர் சொல்லவில்லை. என்னதான் பகையாக இருந்தாலும் சக நடிகரின் சாவிற்கு கூட போகாத இவர் எல்லாம் ஒரு மனிதனா என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார் மீசை ராஜேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *