லியோ படத்தில் லோகேஷிடம், விஜய் கூறிய இரகசியம்!

லியோ படத்தில் லோகேஷிடம்,  விஜய் கூறிய இரகசியம்!
  • PublishedJune 13, 2023

நடிகர் விஜய் படிப்படியாக முன்னேறி இப்போது பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.

இப்போது வேண்டுமானால் விஜய் மற்றும் அவருடைய தந்தை எஸ்ஏசி இருவருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு இருக்கலாம்.

ஆனால் தன்னுடைய தந்தை பட்ட அவஸ்தையை மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு படத்திலும் விஜய் எப்படி நடந்து கொள்வார் என்பதை லோகேஷிடம் தளபதி லியோ பட ஷூட்டிங்கில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அதாவது தனது தந்தை சந்திரசேகர் இயக்குனராக எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார் என்பது தனக்கு நன்றாக தெரியும் என்றும் அதனாலேயே இயக்குனர்களை தொந்தரவு செய்யாமல் தனது பணியை முடித்துக் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்.

விஜய் ஒரு முறை ஒரு படத்திற்கு கதை கேட்டுவிட்டு ஓகே சென்று விட்டார் என்றால் அதன்பிறகு டைரக்டர் விஷயத்தில் தலையிடவே மாட்டார் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான். இதற்கு பின்னால் அவருடைய தந்தைதான் உள்ளார் என்ற விடயத்தை தளபதி தற்போது லோகேஷிடம் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *