லியோ படத்தில் இணையும் இன்னும் சில இயக்குனர்கள் – இதுக்கு முடிவே இல்லையா?

லியோ படத்தில் இணையும் இன்னும் சில இயக்குனர்கள் – இதுக்கு முடிவே இல்லையா?
  • PublishedJuly 7, 2023

பிரபல இயக்குனரும், மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றி வரும் ரத்தின குமார் ஒரு புதிய தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன், அனுராக் மற்றும் மன்சூர் அலிகான் என்று ஒரு பெரிய இயக்குனர்கள் பட்டாளமே நடித்து வருகின்றனர்.

அதேபோல இந்தியாவின் பல திரைத்துறைகளை சேர்ந்த பல முன்னணி நடிகர்களும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனரும், மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றி வரும் ரத்தின குமார் ஒரு புதிய தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி லியோ திரைப்படத்தில் ஏற்கனவே 5 இயக்குனர்கள் நடித்து வருகின்றனர்.

ஆனால் இந்த லிஸ்டில் இன்னும் சிலர் இணையவுள்ளார்கள் என்று கூறி ஏற்கனவே ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை இன்னும் அதிகமாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *