20 வருடங்களில் முதல் முறையாக கமலுடன் இணையும் நயன்தாரா!

20 வருடங்களில் முதல் முறையாக கமலுடன் இணையும் நயன்தாரா!
  • PublishedApril 9, 2023

நடிகை நயன்தாரா தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து ஏறக்குறைய 20 வருடங்களைக் கடந்துள்ளது. இருந்தாலும், இவர் நடிகர் கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து நடித்ததில்லை. அவ்வளவு ஏன் அவருடைய திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் கூட வந்ததில்லை.

கமல்ஹாசன் என்றாலே அவருடன் நடிப்பதற்கு சில நடிகைகள் தயக்கம் காட்டுவதுண்டு. காரணம் அவருடைய படங்களில் நெருக்கமான காட்சிகள் அதிகம் இருக்கும்.

இப்படி இருக்ககையில் நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆனால் கமலிடம் இருந்து விலகியே இருக்கிறார். இந்த நிலையில், விக்னேஷ் சிவன் ஒரு திட்டத்தை தீட்டியிருக்கிறார்.

அதாவது,  ஏற்கனவே ரவுடி பிச்சர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ஒரு படத்தின் இயக்க விக்னேஷ் சிவன் தயாராகியிருக்கிறார்.

இப்படத்தில் நடிகை நயன் தாராவும் முக்கிய ரோலில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கமல் ஹாசனும் இப்படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

இத்தனை ஆண்டுகளாக ஜோடியாக நடிக்க தான் முடியாமல் போனது. நயன் தாரா படத்தை தயாரிக்க முடிவெடித்திருக்கிறார் கமல்ஹாசன். இதை விக்னேஷ் சிவன் கமல் ஹாசனை சந்தித்து பேசியிருப்பதாகவும் கூறப்படுவதால் பல ஆண்டுகள் கழித்து நயன் – கமல் இணையவுள்ளார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *