தங்கம், வெள்ளியில் ஆடை – நிதா அம்பானியின் நெக்லஸ் எத்தனை கோடி தெரியுமா?

தங்கம், வெள்ளியில் ஆடை – நிதா அம்பானியின் நெக்லஸ் எத்தனை கோடி தெரியுமா?
  • PublishedMarch 5, 2024

நிதா அம்பானி தன்னுடைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் அணிந்திருந்த, மரகத கல் பதித்த நெக்லஸின் விலை குறித்த தகவல் வெளியாகி பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ரிலைஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின், இரட்டை பிள்ளைகளான ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமண நடந்த நிலையில், தற்போது இவர்களின் கடைசி மகனான, ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளது.

ஆனந்த் அம்பானி, பிரபல தொழிலதிபர் விரன் மெர்ச்சண்ட்டின் மகளும், தன்னுடைய நீண்ட நாள் காதலியுமான… ராதிகா மெர்ச்சண்ட்டை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு, மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் நடக்க இடையில் இன்னும் நான்கு மாதங்கள் இருந்தாலும்… திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை நடத்த அம்பானி குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி மார்ச் 1-ஆம் தேதி, இவர்களின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் துவங்கி மார்ச் 3-ஆம் தேதியோடு முடிவடைந்தது. குஜராத்தில் உள்ள ஜாம்நகர் பகுதியில் நடந்த இந்த கொண்டாட்டத்தில், பாலிவுட் திரைபிரபலங்கள் திரண்டு வந்து கலந்து கொண்ட நிலையில், பில்கேட்ஸ், சுந்தர் பிச்சை, போன்ற ஏராளமான தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர். தென்னிந்தியாவில் இருந்து ரஜினிகாந்த், ராம் சரண் போன்ற குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தின் நிறைவு நாளான நேற்று (மார்ச் 3-ஆம் தேதி) நிதா அம்பானி… தென்னிந்திய நெசவாளர்களால், தங்கம் மற்றும் வெள்ளி இழைகள் கொண்டு நெய்யப்பட்ட பாரம்பரிய காஞ்சிபுர பட்டு புடவை அணிந்திருந்தார். இந்த புடவைக்கு எம்போசி மற்றும்.. எம்ராய்டரி வேலைப்பாடுகள் மூலம் கூடுதல் அழகு சேர்த்திருந்தார் பிரபல ஆடை வடிவமைப்பாளரான மணீஷ் மல்ஹோத்ரா.

எப்படி நிதா அம்பானி உடுத்தி இருந்த ஆடை பலரது கவனத்தையும் ஈர்த்ததோ… அதே போல் அனைவரது பார்வைகளும் அவர் அணிந்திருந்த நெக்லஸ் மீதும் இருந்தது. அவர் அணிந்திருந்த நெக்லஸில் இரண்டு மிகப்பெரிய அளவிலான… மரகத கற்கள் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் நெக்லஸ் முழுவரும், வைர கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்தநெக்லஸுக்கு பொருத்தமான ஸ்டட் காதணிகள், வளையல்கள் மற்றும் மோதிரமும் அணிந்திருந்தார் நிதா.

இந்நிலையில், நிதா அம்பானி அணிந்திருந்த மரகத கல் மற்றும் வைரம் பதித்த அந்த நெக்லஸ் மட்டும் ரூபாய் 400 கோடி முதல் 500 கோடி இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. காரணம், அவர் அணிந்திருந்த மரகத கல், எளிதில் யாராலும் பார்க்க கூட முடியாத மிகப்பெரிய கற்களாகும். எனவே தற்போது ப்ரீ வெடிங் நிகழ்ச்சியை விட, நிதா அம்பானியின் நகை அதிகம் பேசு பொருளாக பாலிவுட் வட்டாரத்தில் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *