பாதியிலேயே நின்று போன ரஜினியின் கனவு படம் : மீண்டும் எடுக்கப்படுமா என்ற ஆவலில் இரசிகர்கள்!

பாதியிலேயே நின்று போன ரஜினியின் கனவு படம் : மீண்டும் எடுக்கப்படுமா என்ற ஆவலில் இரசிகர்கள்!
  • PublishedApril 21, 2023

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ரஜினி கூட்டணியில் எடுக்கப்பட இருந்த திரைப்படம் தான் ராணா. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த படம் திடீரென தடைப்பட்டு நின்றது ரசிகர்களை இன்று வரை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில்,  பாதியிலேயே நின்று போன அந்த படம் பற்றிய ஒரு விஷயத்தை இயக்குனர் தெரிவித்திருக்கிறார். அதாவது அந்த படம் தான் தனக்கு கடைசி படம் என்று ரஜினி முடிவு செய்திருந்தாராம்.

அதனாலேயே அப்படம் பூஜை போடும் சமயத்தில் தனக்கு நெருக்கமான அத்தனை பேரையும் அவர் அழைத்திருக்கிறார். இப்படியெல்லாம் ஆரம்பிக்கப்பட்ட அந்த படம் நின்று போனது இன்று வரை ரஜினிக்கும் ஒரு வருத்தமாக தான் இருக்கிறது.

அதனாலேயே கே எஸ் ரவிக்குமாரை சமீபத்தில் சந்தித்தபோது அந்த கதை குறித்து அவர் விவாதித்திருக்கிறார். இதனால் இப்படம் மீண்டும் ஆரம்பிக்கப்படுமா என்ற ஒரு ஆர்வம் எழுந்திருக்கிறது. அதிலும் தீபிகா படுகோன் மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க சம்மதிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதேபோன்று தான் மருதநாயகம் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பாதியிலேயே நின்று போனது குறிப்பிட்டதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *