படத்தின் மொத்த பட்ஜெட்டையும் சம்பளமாக வாங்கிய ஷாருக்கான்!
எத்தனையோ சர்ச்சைகளை கடந்து வெளியான பதான் திரைப்படத்தை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் தற்போது ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது.
உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்திற்காக ஷாருக்கான் வாங்கிய சம்பளம் தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
அதாவது இப்படத்திற்காக போட்ட மொத்த பட்ஜெட்டையுமே அவர் சம்பளமாக பெற்றிருக்கிறாராம். அந்த வகையில் பதான் திரைப்படம் 225 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஷாருக்கானின் சம்பளம் மட்டுமே 200 கோடி ரூபாய். இதுவரை அவர் வாங்கிய சம்பளத்திலேயே இதுதான் அதிகபட்ச சம்பளம் ஆகும்.
அந்த வகையில் ஷாருக்கான் பதான் படத்திற்கு முன்பு வரை 150 கோடி சம்பளம் தான் பெற்று வந்தார். ஆனால் தாறுமாறாக வசூல் வேட்டையாடிய இப்படத்தினால் மகிழ்ந்து போன தயாரிப்பாளர் அவருக்கு கேட்டதற்கும் மேலாகவே இவ்வளவு பெரிய தொகையை கொட்டிக் கொடுத்திருக்கிறார்.
இது பாலிவுட்டின் மற்ற கான் நடிகர்களை மட்டுமல்லாமல் ஜவான் பட தயாரிப்பாளரையும் கொஞ்சம் பதற தான் வைத்திருக்கிறது. ஏனென்றால் அப்படத்திற்காக இதைவிட அதிகபட்ச சம்பளத்தை தான் ஷாருக்கான் கேட்டிருக்கிறாராம்.
இந்த விடயம் அட்லிக்கு சற்று தலைவலியை கொடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.