நிற்கக் கூட தெம்பில்லாத ரோபோ சங்கர் : பயில்வான் வெளியிட்ட கருத்து!

நிற்கக் கூட தெம்பில்லாத ரோபோ சங்கர் :  பயில்வான் வெளியிட்ட கருத்து!
  • PublishedMay 8, 2023

நடிகர் ரோபோ சங்கர் சமீபத்தில் வெளியிட்ட ஒளிப்படம் அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில், அவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததாகவும், அதற்காக அவர் இரகசியமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், அவருடைய உடல்நிலைக் குறித்து பயில்வான் வெளியிட்டுள்ள  கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது ரோபோ சங்கரை பொருத்தவரையில் அவர் நல்ல மனிதர். ஆனால் வெள்ளிதிரைக்கு வந்த பிறகு சில நண்பர்களுடன் சேர்ந்து மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்.

மேலும் அளவுக்கு அதிகமாக குடித்ததால் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உடல் உறுப்புகள் செயல் இழக்கும் அளவுக்கு சென்றுள்ளது.

இப்போது அதற்கான தீவிர சிகிச்சையை மேற்கொண்டு வருகிறாராம். மேலும் பயில்வான் சொன்ன மற்றொரு விஷயம் தான் ரசிகர்களை பேர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

அதாவது ரோபோ சங்கரால் நிற்க கூட முடியவில்லை. அவரது மனைவி மற்றும் மகள் தான் கைதாங்கலாக அழைத்துச் செல்கிறார்களாம். ரோபோ சங்கரை நேரில் சென்று பார்த்தவர்கள் சொன்னதாக பயில்வான் இருக்கிறார்.

பயில்வானுடைய இந்த கருத்து தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *