பிரம்மாண்டமாக நடந்த விஜய் டிவியின் விருது விழா : 2 விருதுகளை தட்டி தூக்கிய சீரியல்!

பிரம்மாண்டமாக நடந்த விஜய் டிவியின் விருது விழா : 2 விருதுகளை தட்டி தூக்கிய சீரியல்!
  • PublishedMay 8, 2023

தமிழ் சினிமாவை பொருத்தவரை வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு போலவே தற்போது சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு கலைஞரையும் கௌரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு அங்கீகாரமாக கொடுக்கப்படும் ஒன்று விருதுகள். இது ஒவ்வொரு வருடமும் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து 8வது விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சி தற்போது நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் விஜய் டிவியின் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சீரியலுக்கு சிறந்த சீரியல் மற்றும் நமக்கு பிடித்த நடிகர் நடிகைகள் அனைவரும் விருதுகளை பெற்றிருக்கிறார்கள்.

இதன்படி,   சிறந்த இளம் ஜோடிக்கான விருது காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடிக்கும் வெண்ணிலா மற்றும் சூர்யா. பெஸ்ட் நெகட்டிவ் ரோல் கேட்டகிரியில் பாக்கியலட்சுமி சீரியல் நடிக்கும் ராதிகா. குழந்தை நட்சத்திரத்துக்கான விருது செல்லம்மாள் சீரியலில் நடிக்கும் மலர் பாப்பா.

பெஸ்ட் டைரக்டர் ஈரமான ரோஜாவே 2 இயக்குனர் தாய் செல்வம். பெஸ்ட் ஜோடி என்ற விருது ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிக்கும் பார்த்திபன் காவியா விற்கு கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *