21 ஆண்டுகளாக நீங்காத நினைவலைகளுடன் சிம்ரன்!
நடிகை சிம்ரன் நேற்று சோசியல் மீடியாவில் பதிவிட்ட ஒரு புகைப்படத்தால் அவருடைய வருத்தத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது நேற்று சிம்ரனுடைய தங்கையான மோனாலின் 21 ஆவது நினைவு தினம். இதனை முன்னிட்டு அவர் தன்னுடைய தங்கையுடன் இருந்த சிறுவயது புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
மேலும் என் அழகான தங்கையை ரசிகர்களாகிய நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதை பார்த்த பலரும் மோனல் நடித்த படங்கள் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். நடிக்க வந்த புதிதிலேயே விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து வந்த இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.