தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோயின்ஸ் தவறவிட்ட சில படங்கள்!

தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோயின்ஸ் தவறவிட்ட சில படங்கள்!
  • PublishedMay 4, 2023

மஞ்சுவாரியர்: நடிகை மஞ்சு வாரியர் கேரள சினிமா உலகின் முன்னணி ஹீரோயின் ஆவார். இவர் நேரடி தமிழ் படத்தில் முதன் முதலில் நடித்தது அசுரன் தான். ஆனால் அதற்கு முன்பாகவே தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதாவது, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருந்தது. இருப்பினும் அவர் அதை தவறவிட்டிருந்தார்.

சினேகா: புன்னகை அரசி என தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை சினேகா. இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்தை சினேகா தவறவிட்டார்.

தேவயானி: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படமான படையப்பா திரைப்படத்தில் சௌந்தர்யா கேரக்டரில் முதலில் தேவயானி தான் நடிப்பதாக இருந்திருக்கிறது.

அனுஷ்கா: பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படம் பண்ணப் போகிறார் என்று அறிவிப்பு வெளியாகும் போது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஹீரோயின் அனுஷ்கா தான். அதேபோன்று அனுஷ்காவுக்கும் அந்த படத்தில் நந்தினியாக நடிப்பதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அனுஷ்கா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். அதேபோன்றுதான் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் குந்தவையாக நடிக்கும் வாய்ப்பு தேடிச் சென்றும் அந்த கேரக்டரின் வலிமை புரியாமல் அவர் அதை மறுத்து விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *