நடிகராக களமிறங்கும் வெற்றி இயக்குனர் : கெரியரை இழந்துவிடுவாரோ என்ற பயத்தில் இரசிகர்கள்!
தற்போதைய சினிமாவை பொருத்தவரையில் இயக்குனர்களும் தங்கள் இயக்கும் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தை நடிப்பதில் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். ஆனால் முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த டெக்னிக் எல்லோருக்கும் கைக்கொடுக்காது என்பதுதான்.
ஆரம்பத்தில் இந்த ஒரு படத்தில் மாத்திரம் நடிப்போம் என ஆரம்பித்து பிற்காலத்தில் அதையே வழக்கமாக்கிக் கொள்கிறார்கள். இதனால் சிலருடைய சினிமா கெரியரே பரிப்போய்விடும். தற்போது இப்படியான ஒரு மனநிலையில், முன்னணி இயக்குனர் ஒருவர் வலம் வருகிறாராம். அவர் நடிக்க ஆரம்பித்தால், அடுத்தடுத்து அவர் இயக்கும் படங்கள் தோல்வியை சந்திக்குமோ என்ற பயத்தில் அவருடைய இரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
தமிழில் மாநகரம் என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் அந்த இயக்குனர். ஆர் ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் என்னும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இப்படி அவர் நடிப்பு பக்கம் வந்தால் கண்டிப்பாக அவருடைய கேரியர் முடிந்து விடும் என்பது தான் உண்மை.