தம்பிக்கு கைக்கொடுத்து தூக்கிவிடும் சூர்யா : கணக்கு சரியா இருக்குமா?

தம்பிக்கு கைக்கொடுத்து தூக்கிவிடும் சூர்யா : கணக்கு சரியா இருக்குமா?
  • PublishedJune 3, 2023

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததற்கு பிறகு கார்த்தியின் படத்திற்கு ஓரளவுக்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடமிருந்து வர ஆரம்பித்துவிட்டது.

தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் ஜப்பான் படம் இறுதி கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. இப்படத்தை ஜோக்கர் படத்தின் இயக்குனர் ராஜூ முருகன் இயக்குகிறார். இந்தப் படம் வருகிற தீபாவளி அன்று திரையரங்கில் வெளியிடுவதற்கு தயாராகி இருக்கிறது. இந்த படம் கார்த்திக்கு கைக்கொடுக்குமா என்ற சந்தேகமும் உள்ளது.

இதற்கிடையே 96 திரைப்படத்தின் இயக்குனர் பிரேம்குமார் உடன் கூட்டணி அமைக்கிறார். ஏனென்றால் இவருடைய 96 படம் எந்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை ஏற்படுத்தியது என்று அனைவரும் அறிந்ததே.

அடுத்ததாக இப்படத்தின் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க இருக்கிறார். இவர் நடித்த தனி ஒருவன் படம் எப்படி இருந்ததோ அதேபோல் இப்படத்திலும் அரவிந்த்சாமி கதாபாத்திரம் கண்டிப்பாக மக்களுக்கு பிடித்த மாதிரியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் இப்படத்தை 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமான சூர்யா தான் தயாரிக்க இருக்கிறார். தம்பியை கைப்பிடித்து தூக்கும் எண்ணத்திலும்,  எப்படியும் இந்த படம் வெற்றி அடையும் அதன் மூலம் லாபத்தை சம்பாதிக்கலாம் என்று ஒரு கல்லில் இரண்டு மாங்கா என்ற ஆசையில் தயாரிக்க இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *