கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு தனி விமானத்தில் பறந்த விஜய் – த்ரிஷா.. வைரலாகும் வீடியோ
தனி விமானத்தில் த்ரிஷாவுடன் கோவா சென்று, கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சினிமாவை தொடர்ந்து தற்போது அரசியலில் கால் ஊன்றியுள்ள தளபதி விஜய், சமீப காலமாக சில கிசுகிசுவில் சிக்கி வருகிறார். அதன்படி, ஏற்கனவே விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒரே அப்பார்ட்மென்டில் வீடு வாங்கி, பக்கத்து பக்கத்தில் வசித்து வருவதாக ஒரு வதந்தி பரவிய நிலையில், தற்போது எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஒரு சம்பவத்தை தான் செய்து தளபதி தொக்காக சிக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நேற்று கோவாவில் திருமணம் நடந்தது. கீர்த்தி தன்னுடைய 15 வருட காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை தான் கீர்த்தி திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த சென்ற விஜய் பட்டு வேஷ்டி சட்டையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது.
ஒரு தரப்பினர் இதனை, “தளபதி விஜய் தன்னுடைய தோழி மற்றும் சக நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் நேரில் கலந்து கொள்ள சென்றதை சாதாரணமாக கடந்து சென்றாலும்”, இது அரசியல் விமர்சகர்கள் பக்கத்தில் விவாதமாக மாறியது.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பின் போது மக்களை நேரில் சந்திக்க வராத தளபதி, புயலால் பாதிக்க பாட்டவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து நிவாரண பொருட்களை வழங்கியவர் இப்போது கோவா வரை சென்றுள்ளார் என வசைபாடினர்.
இந்த சம்பவம் குறித்த பரபரப்பு ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, தற்போது தளபதி விஜய் இந்த திருமணத்தில் தனியாக கலந்து கொள்ளவில்லை, நடிகை த்ரிஷாவுடன் தான் கலந்து கொண்டுள்ளர் என்கிற புது தகவல் கிடைத்துள்ளது.
கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்து கொள்ள, த்ரிஷாவுடன் தனி விமானத்தில் சென்றுள்ளார் தளபதி. இருவரும் தனி விமானத்தில் இருந்து இறங்கி காரில் ஏறும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது லீக் ஆக தொக்கா சிக்கிட்டார் விஜய்.