சப்தமே இல்லாமல் லேடி சூப்பர் ஸ்டாரையே ஓரங்கட்டிய நடிகை!

சப்தமே இல்லாமல் லேடி சூப்பர் ஸ்டாரையே ஓரங்கட்டிய நடிகை!
  • PublishedApril 2, 2023

நடிகை ஒருவர் சப்தமே இல்லாமல் மெல்ல மெல்ல லேடி சூப்பர் ஸ்டார் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட நடிகைதான் நயன்தாரா. ஆனால் திருமணத்திற்கு பிறகு என்னவோ எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வெளிவந்த சில படங்களும் சொல்லும்படியாக ஓடவில்லை.

இந்நிலையில் நயன்தாராவை புக் செய்த தயாரிப்பாளர்கள் எல்லாரும் வேறு ஒரு கதாநாயகியை அணுகுகிறார்கள். பெண்களை மையப்படுத்தி எடுக்கும் கதைக்கு இவர் பொருந்துகிறார் என்று அவரிடம் சரண் அடைகின்றனர். பல கோடி சம்பளம் கேட்கும் நயன்தாராவை விட இந்த நடிகை சில கோடிகள் மட்டுமே சம்பளமாக வாங்குகிறாராம்.

இதனால் படத்தின் பட்ஜெட்டும் எகிறாது என்பதால் தயாரிப்பாளர்களின் சாய்ஸ் இவராக உள்ளார். சமீப காலமாகவே லேடி சூப்பர் ஸ்டாரை அப்படியே பின்பற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ் பெண்களை மையப்படுத்தி எடுக்கும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அசத்தி வருகிறார். படங்களும் சூப்பர் ஹிட் ஆகிறது.

சமீபத்தில் இவர் நடித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் சக்கை போடு போட்டது. இவருடைய நடிப்பில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக இருக்கும் ‘சொப்பன சுந்தரி’ திரைப்படமும் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. ஆகவே சப்தமே இல்லாமல் லேடி சுப்பர் ஸ்டாரையே பின்தள்ளிட்டார் என கிசுகிசுக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *