வடிவேலுவும், சர்ச்சைகளும் : திமிரு பேச்சால் சேர்ந்து நடிப்பதையே நிறுத்திக் கொண்ட ஹீரோக்கள்!

வடிவேலுவும், சர்ச்சைகளும் : திமிரு பேச்சால் சேர்ந்து நடிப்பதையே நிறுத்திக் கொண்ட ஹீரோக்கள்!
  • PublishedApril 2, 2023

நேற்று, இன்று, நாளை இப்படி எந்த காலம் வந்தாலும், நம்ம தல வடிவேலுவினுடைய காமெடிக்கு இரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் மௌசு ஜாஸ்தி என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த காலப்பகுதியில் அவர் திரைப்படங்களில் தோன்றவில்லை என்றாலும், மீம்ஸ் மூலம் வைரலாகி வந்தார். அந்த அளவிற்கு அவருடைய காமடி அமைந்திருக்கும்.

என்னதான் புகழின் உச்சியில் இருந்தாலும், வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட பல நடிகர்கள் இருக்கிறார்கள். அப்படிதான் வடிவேலுவும், சில ஹீரோக்களை தரம் குறைவாக பேசி அவமானம் செய்துள்ளார்.

அப்படியான சில ஹீரோக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஊட்டி கோர்ட்டில் தொடரப்பட்ட விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு வாபஸ் | Vijayakanth defamation case filed in Ooty Court withdrawn

விஜயகாந்த்: இவரை பிடிக்காதவர்கள் யாரும் கிடையாது அந்த அளவிற்கு ஒரு நல்ல மனசு படைத்த ஒரு மாமனிதர் என்றே சொல்லலாம். ஆனால் இவருக்கு சினிமாவில் அதிக பிரச்சினையை ஏற்படுத்தியது காமெடி நடிகர் வடிவேலுதானாம்.

சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுக்கு ஒரு சான்ஸ் வேண்டும் என்று இயக்குனரிடம் சிபாரிசு செய்து எனக்கு படம் முழுக்க குடை பிடிக்கும் ஒருவராக இவரை போட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார். அப்படி வந்தவர்தான் நகைச்சுவையில் இப்பொழுது கலக்கி கொண்டிருக்கிறார்

ஆனால் இவர்களுக்குள் ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடித்து வந்திருக்கிறது. நிறைய இடங்களில் இதை பற்றி நேரடியாக விஜயகாந்தை தாக்கி வடிவேலு பேசி இருக்கிறார்.

Ajith Kumar: விஜயண்ணா தம்பியை தட்டித்தூக்கிய அஜித்: 'ஏகே 63' இயக்குனர் இவரா..! - ajith kumar starring ak 63 movie latest update - Samayam Tamil

அஜித்குமார்: இவர் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளிவந்த ராஜா படத்தின் மூலம் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அப்பொழுது ஒரு காட்சியில் உண்மையாகவே மரியாதை கொடுக்காமல் கொஞ்சம் தரக்குறைவாக பேசி இருக்கிறார்.

இதை பார்த்த இயக்குனர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் அஜித்திடம் இந்த காட்சியை அப்படியே நிப்பாட்டி விடலாமா இது சரிப்பட்டு வராது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அஜித் இல்லை இந்த படம் நல்லபடியாக எடுத்து முடிக்க வேண்டும்.

அதனால் இதை பெரிசாக எடுத்துக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அதன் பின் மற்ற எந்த படங்களிலும் இவர்கள் சேர்ந்து நடிப்பதை நிறுத்தி விட்டார்கள்.

dhanush, ஒருநாள் இரவில் என் வாழ்க்கை மாறியது : தனுஷ் - dhanush about the success of kathal konden movie - Samayam Tamil

தனுஷ்: இவர் நடிப்பில் வெளிவந்த படிக்காதவன் படத்தில் காமெடியனாக முதலில் வடிவேல் அவர்கள் தான் நடித்திருக்கிறார். அவரை வைத்து நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் வடிவேலு இப்படத்தின் வில்லனாக இருக்கும் சுமன் காலை பிடிக்கும் ஒரு காட்சியை இயக்குனர் அவரிடம் சொல்லும் போது இப்படி எல்லாம் என்னால் நடிக்க முடியாது என்னுடைய கௌரவம் எனக்கு ரொம்ப முக்கியம் அப்படி என்று இந்த படத்தை பாதியில் நிப்பாட்டி விட்டு போயிட்டார்.

Actor Parthiban informed that the face is red due to corona vaccination | முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்

பார்த்திபன்: இவர் வடிவேலு உடன் சேர்ந்து பத்து படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவர்கள் காம்போவில் வந்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிறது. அத்துடன் வடிவேலு செய்யும் காமெடிக்கு குண்டக்க மண்டக்காக பேசி அவரை கவுக்கும் வகையில் நிறைய படங்களில் பார்த்திபன் நடித்திருப்பார். இதுவே இவருக்கு மனதளவில் ஒரு கோபத்தை நீண்ட நாட்களாக வைத்திருக்கிறார். அதே மாதிரி இவர்கள் கடைசியில் நடித்த குண்டக்க மண்டக்க படத்தில் பார்த்திபன் அவரை மரியாதை குறைவாக பேசியதால் வடிவேலு இன்செல்டிங்காக நினைத்து ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் பின் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதே நிறுத்தி விட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *