யூடியூப்பை ஓரம் கட்டிய ஓடிடியின் வருகை!

யூடியூப்பை ஓரம் கட்டிய ஓடிடியின் வருகை!
  • PublishedApril 22, 2023

பெரும்பாலும், யூடியூப் மட்டுமே செயல்பாட்டில் இருந்த காலத்தில், ஓடிடியின் வருகையானது சற்று பின்னடை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.

சமீபகாலமாக யூடியூப் செனல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா பரவல் காலப்பகுதியில், ஓடிடியின் வருகையானது யூடியூபிற்கு தலைவலியைக் கொடுத்தது எனலாம்.

பெரும்பாலான தயாரிப்பாளர்கள் அப்போது படங்களை ஒடிடியில் வெளியிட முன் வந்தனர். டாப் நடிகர்கள் படங்கள் மட்டும் தான் சமீபகாலமாக தியேட்டரில் வெளியாகிறது. அதுவும் தியேட்டரில் வெளியான ஒரு மாதத்திலேயே ஓடிடியிலும் வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் ஓடிடியால் கடந்த வருடங்களில் இல்லாத அளவுக்கு யூடியூப் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதாவது இந்தியாவில் கடந்த ஒரு வருடத்திற்கு யூடியூபூக்கு பத்தாயிரம் கோடி மட்டுமே ரெவென்யூ கிடைத்துள்ளது. மேலும் ஓடிடிக்கு ஒரு வருடத்திற்கு 10500 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதில் ரசிகர்கள் அதிகம் பார்க்கும் ஓடிடி நிறுவனங்களில் ஹாட் ஸ்டார்,  நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் ஹாட் ஸ்டார் 4300 கோடி ஒரு வருடத்திற்கு லாபம் பார்த்துள்ளது. அதேபோல் நெட்பிளிக்ஸ் 1600 கோடி கல்லா கட்டியது.

மேலும் ஓடிடி மற்றும் யூடியூப் இரண்டுமே இப்போது சரிசமமாக வருமானம் பெற்று இருந்தாலும் கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை யூடியூபின் வருமானம் குறைவு தான். ஆனால் ஓடிடி தனது வருமானத்தை அதிகப்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *