கோ பட பாணியில் நடத்த சம்பவம் : உயிருக்காக 14 வயது சிறுமியை திருமணம் செய்த பிரபல நடிகர்!

கோ பட பாணியில் நடத்த சம்பவம் : உயிருக்காக 14 வயது சிறுமியை திருமணம் செய்த பிரபல நடிகர்!
  • PublishedApril 8, 2023

ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை ஒருவர் தற்போது எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்பது கூட வெளிவராத வகையில், தன்னை சுற்றி ஒரு வட்டத்திற்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்.

இதற்கெல்லாம் காரணம் அந்த பிரபல நடிகர் தானாம். குறிப்பாக நடிகைக்கு 14 வயதில் நடத்த திருமணம் தான் அவர் ஆண்களை வெறுத்து தற்போதும் தனிமையில் வாழ காரணமாம்.

அதாவது பிரபல நடிகர் ஒருவர் அடிக்கடி உடல் நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்.அதற்காக ஜாதகம் பார்த்த போது கன்னி கழியாத சிறுமியை திருமணம் செய்து கொண்டால் நோய் நொடி இல்லாமல் நூறு வயது வரை வாழலாம் என்று ஜோதிடர் கூறியிருக்கிறார்.

அதை அப்படியே நம்பிய அந்த நடிகரும் அந்த சமயத்தில் தன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த 14 வயதே ஆன இந்த நடிகையை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து இருக்கிறார். இது அந்த காலகட்டத்தில் பலருக்கும் தெரியும்.

ஆனாலும் அவரை எதிர்க்க யாரும் முன் வரவில்லை. ஏனென்றால் அப்போது அந்த நடிகர் யாரும் நெருங்க முடியாத ஒரு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார். அதேபோன்று இந்த நடிகையின் அம்மாவும் பிரபல நடிகை தான். அவராலும் கூட அந்த நடிகரை எதிர்த்து செயல்பட முடியவில்லை.

ஆனால் சில நாட்களிலேயே இந்த விவகாரம் பத்திரிகைகளில் வெளிவந்து பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அதன் பிறகு எங்கே தன்னுடைய பெயர் கெட்டுப் போய் விடுமோ என்ற பயத்தில் அந்த நடிகர் நடிகையை அவருடைய வீட்டிற்கே திருப்பி அனுப்பி இருக்கிறார். இந்த சம்பவத்தால் தான் நடிகை யாரையும் நம்பாமல் இன்றுவரை தனிமையில் வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *