எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பாக்ஸ் ஒஃபீஸை கலக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்!

எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பாக்ஸ் ஒஃபீஸை கலக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்!
  • PublishedMay 7, 2023

நாடு முழுவதும் ஏகப்பட்ட எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கும் மத்தியில் நேற்று ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது.

மதம் சார்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை தடை செய்ய வேண்டும் எனக் கூறி பல்வேறு கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இருப்பினும் இவை அனைத்தையும் முறியடித்து அந்த திரைப்படம் வெற்றிகரமாக வெளியாகியதோடு, முதல் நாளிலேயே 8 கோடி வசூல் பெற்றுள்ளது.

இந்த வசூல் படத்திற்கு நல்ல ஓபனிங் தான். அதுமட்டுமல்ல ஹாலிவுட் திரைப்படமான ‘கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி 3’ படத்தின் வசூலை மிஞ்சியது ‘தி கேரளா ஸ்டோரி’.

ஹிந்தி இயக்குனர் சுதிப்தோ சென்னின் இயக்கத்தில் பாலிவுட்டில் தயாரான படமான ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் அதா ஷர்மா,  யோகிதா பிஹானி,  சித்தி இத்னானி மற்றும் சோனியா பாலனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *