மாரி செல்வராஜுக்கு சரியான பதிலடிகொடுத்த ஆண்டவர்!

மாரி செல்வராஜுக்கு சரியான பதிலடிகொடுத்த ஆண்டவர்!
  • PublishedJune 21, 2023

உலக நாயகன் கமலஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் டியாலிட்டி நிகழ்ச்சியிலும் நடுவாராக செயற்படவுள்ளார்.

இந்நிலையில்,  சமீபத்தில் மாமன்னன் படத்தின் விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் உலக நாயகன் கமலஹாசன் பங்கு பெற்றார். இதன்போது  மாரி செல்வராஜ் தன்னுடைய படங்கள் எடுக்க தேவர் மகன் படம் தான் முன் உதாரணம் என்று கூறியிருந்தார்.

இந்த படத்தில், இடம்பெற்ற இசக்கி காதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் மாமன்னன் படம் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு தேவர் மகன் படத்தை மாரி செல்வராஜ் மோசமாக விமர்சித்து இருந்தாலும் பெரிய மனுஷன் ஆக நடந்து கொண்டு கமல் தனது பாணியில் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அதாவது தனக்கும்,  இளையராஜா போன்ற பிரபலங்களுக்கும் வடிவேலுவை மிகவும் பிடிக்கும். ஆரம்பத்தில் தேவர் மகன் படத்தில் இவரை நடிக்க வைக்க பலரும் யோசித்தனர்.

பார்ப்பதற்கு ஒல்லியாக இருக்கிறார் இவர் இந்த கேரக்டருக்கு செட் ஆவாரா என கேள்விகள் எழுந்தது. ஆனால் இன்றும் தேவர் மகன் கிளைமாக்ஸ் காட்சி மனதில் நிற்க வடிவேலு தான் காரணம்.

கடைசியில் இந்த பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று இசக்கி சொல்லும் போது  நீங்க ஏத்துக்கிட்டதெல்லாம் போதும் போய் படிங்கடா என்று சொல்வதற்கு ஒரு அழுகுரல் கேட்டால் தான் செய்ய முடியும் என்று கமல் கூறியிருந்தார்.

இதன் மூலமாகவே மாரி செல்வராஜுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *