‘கல்கி 2898 ஏடி’ படத்தின் ரிலீஸ் தேதி மிக பிரம்மாண்டமாக அறிவிப்பு
சலார் படத்திற்கு பின் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட படம் ‘கல்கி 2898 ஏடி’. நாக் அஸ்வின் இயக்குகிறார். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இது புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்ட எதிர்காலத்தில் நடைபெறும் அறிவியல் புனைவு படைப்பாகும்.
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பிரமாண்டமாய் தயாரிக்க, பன்மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர்.
The story that ended 6000 years ago.
𝐁𝐞𝐠𝐢𝐧𝐬 𝐌𝐚𝐲 𝟗𝐭𝐡, 𝟐𝟎𝟐𝟒.The future unfolds. #Kalki2898AD@SrBachchan #Prabhas@deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD #Kalki2898ADonMay9 pic.twitter.com/r7KJdkUsjr
— Kamal Haasan (@ikamalhaasan) January 12, 2024
அதன்படி ‘கல்கி 2898 ஏடி’ படம் வரும் மே மாதம் 9ம் தேதி வெளியாகிறது.
வாரணாசி, மும்பை, டெல்லி, சண்டிகர், சென்னை, மதுரை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், குண்டூர், பீமாவரம், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கியத்துவம் வாய்ந்த மாநகரங்களில் ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் பிரம்மாண்டமாக வெளியிட்டனர்.