இதுதான் தங்கலான் : ரீல் மற்றும் ரியல் புகைப்படம் வெளியீடு!
பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபகாலமாக விக்ரம் நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால் தங்கலான் படத்தைதான் நம்பியிருக்கிறார்.
பழங்குடியினரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்படும் இப்படம் கோலார் தங்க வயல் பின்னணியில் உருவாகிறது.
மேலும் தங்கலான் படம் வருகின்ற டிசம்பர் இறுதியில் அல்லது அடுத்த வருடம் முதலில் வெளியாகும் என பா ரஞ்சித் செய்தியாளர் சந்திப்பில் கூறுகினார்.
இந்நிலையில், சமீபகாலமாக தங்கலான் படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. அந்த காலத்தில் நிஜ தங்கலானாக வாழ்ந்தவர்களின் புகைப்படம் இப்போது வெளியாகியிருக்கிறது.
இவ்விரு புகைப்படத்தையும் சேர்த்து ரசிகர்கள் ரீல் மற்றும் ரியல் தங்கலான் என ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.