ஹைதராபாத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்ட திரிஷா : காரணம் இதுதானா?

ஹைதராபாத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்ட திரிஷா : காரணம் இதுதானா?
  • PublishedMay 14, 2023

நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது, லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். 14 வருடங்களின் பின் அமைந்துள்ள கூட்டணியில் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை திரிஷா 40 வயதாகியும் திருமணம் பற்றி யோசிக்காமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இதற்கு காரணமே அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் தான் எனக் கூறப்படுகிறது. அண்மையில் திருமணம் குறித்த கேள்விக்கும் உயர் உங்களுடையது என ரசிகர்களை பார்த்து கூறியிருந்தார். ஆகவே இனிமேல் திருமணம் செய்துக் கொள்வாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இவர் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வருண்மனியுடன் 2015இல் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் சில காரணங்களால் அது நின்று போய்விட்டது. அதனால் விரக்தியில் தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி நடிக்கப் போய்விட்டார். அங்கே ஆல்ரவுண்ட் கலக்கி வந்தார். பாலகிருஷ்ணா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார்.

அதன்பிறகு தெலுங்கு நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இதன் மூலம் அங்கே நிறைய பட வாய்ப்புகளை பெற்றார். இவர் இது போன்று தொடர்ந்து நடித்தால் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்துக் கொள்வார் என்ற பயத்தில் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் சேர்ந்து இவருக்கு எதிர்ப்பை தெரிவித்தார்கள். அத்துடன் ஹைதராபாத்துக்கும் வரக்கூடாது என்று பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனாலேயே அம்மணி திருமணத்தை மறுத்து வருகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *