300 நிர்வாகிகளை அழைத்து பாராட்டிய விஜய் : அரசியலுக்கு போடும் பலே திட்டம்!

300 நிர்வாகிகளை அழைத்து பாராட்டிய விஜய் : அரசியலுக்கு போடும் பலே திட்டம்!
  • PublishedApril 29, 2023

தமிழகத்தில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் தளபதி விஜய் விரைவில் அரசியலுக்கு வர காத்திருக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகளாக தன்னுடைய ரசிகர் மன்றத்தின் ஊடாக செய்து வருகிறார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது. அதைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரசிகர் மன்ற இயக்கம் அரசியல் கட்சியாக மாற வாய்ப்பு இருக்கிறது.

அது மட்டுமல்ல வரும் 2026 ஆம் ஆண்டு தளபதி விஜய் சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இறங்கப் போகிறார். திடீரென்று இறங்கினால் டெபாசிட் கூட கிடைக்காது என்பதற்காக இப்போதிலிருந்து ரசிகர் மன்றத்தை வைத்து பல திட்டங்களை செய்ய பிளான் போட்டு இருக்கிறார்.

அதில் ஒன்றுதான் விஜய் ரசிகர் மன்ற இயக்கம் கொண்டு வந்த ‘விலையில்லா விருந்து திட்டம்’. இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு தினம் தோறும் இலவசமாக உணவு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தத் திட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ரசிகர்கள் களப்பணி ஆற்றுவதால் அவர்களை எல்லாம் சென்னையில் உள்ள பனையூரில் இருக்கும் விஜய்யின் வீட்டிற்கு அழைத்து பாராட்டி உள்ளதுடன், அடுத்த திட்டங்களுக்கு தேவையான பணத்தை தருவதாகவும் உறுதியளித்துள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *