ராசியில்லாத நடிகையாக மாறிய விஜய் பட நடிகை!
பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக தெறிக்கவிடும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது வளர்ந்து வரும் நடிகைகள் முதல் டாப் நடிகைகள் வரை அனைவருக்கும் இருக்கும் கனவாக இருக்கிறது.
அப்படி விஜய்யுடன் நடித்து கோலிவுட் மார்க்கெட்டை பிடிக்கலாம் என்று நினைத்த நடிகை ஒருவர் தற்போது ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டுள்ளார்.
சில கலவையான விமர்சனங்களை பெற்ற பீஸ்ட் படத்தால் பூஜாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை. ஆனாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அவர் பிஸியாகவே இருந்தார்.
அந்த வகையில் அவர் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற நிலையில் தற்போது அதுவும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.
விஜய் படத்தில் நடித்தாலே அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியும் என்ற எண்ணத்தில் பக்கா பிளான் போட்டு வந்த இவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. இந்நிலையில், இவர் தற்போது ராசி இல்லாத நடிகையாக முத்திரை குத்தப்பட்டுள்ளார்.