விஜயை தொற்றிக்கொண்ட புதுப் பழக்கம் : இனி ஜாலியோ ஜிம்கானாதான்!

விஜயை தொற்றிக்கொண்ட புதுப் பழக்கம் : இனி ஜாலியோ ஜிம்கானாதான்!
  • PublishedJune 15, 2023

நடிகர் விஜய் எப்போதும் அமைதியாக இருப்பார். ஸுட்டிங்கில் தான் உண்டு தன் வேலை உண்டு என்றே இருப்பார் என பலர் கூற கேட்டிருப்போம்.

ஆனால் அவரின் அந்த சுபாவம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது. அதாவது தற்போதெல்லாம் அவர் ரொம்பவே ஜாலியான டைப்பாக மாறிவிட்டாராம்.

எப்படி என்றால் சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களிடம் நிறைய நேரம் பேசிக்கொண்டு அவர்களை நக்கல் அடிப்பதே வேலையாக வைத்துக் கொள்கிறார்.

அடுத்து சூட்டிங் முடிந்த கையோடு கேரவன் போவதற்கு முன்பு குறைந்தது ஒரு மணி நேரமாவது இவருடன் நடிப்பவர்களுடனும்,  படக்குழுவில் வேலை பார்ப்பவர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்து விட்டு தான் அந்த இடத்தை விட்டு கிளம்புவாராம்.

அது மட்டுமில்லாமல் இவர் கூட வேலை பார்த்தவர்களின் பெர்பார்மன்ஸ் பற்றி பேசி அதிகமாக புகழாரம் செய்து வருகிறார். இது இவரிடம் சமீப காலமாக ஒட்டிக்கொண்ட புதுப்பழக்கமாக இருக்கிறது. இதனால் விஜய்யுடன் நடிப்பவர்கள் பலரும் இதைப் பற்றி பேசி சந்தோஷப்பட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *