விஜயின் வாரிசு எடுத்துள்ள புது அவதாராம் : வைரலாகும் புகைப்படங்கள்!

விஜயின் வாரிசு எடுத்துள்ள புது அவதாராம் : வைரலாகும் புகைப்படங்கள்!
  • PublishedMay 6, 2023

கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக வலம் வரும் நடிகை விஜயின் மகன் சஞ்சயின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட இயக்கம் சம்பந்தமான படிப்பை முடித்துள்ளார். அதனால் அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக விரைவில் அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் தன்னுடைய பேரன் ஜேசன், அப்பா போன்று நடிகராக விரும்பவில்லை. தன்னைப்போல ஒரு இயக்குனராகவே மாற ஆசைப்படுகிறார் என நிறைய பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

இதனப்டி தற்போது   ஜேசன் கனடாவில் ‘புல் தி ட்ரிக்கர்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இது சம்பந்தப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த குறும்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

vijay-son-cinemapettai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *