திருமணம் எப்போது? : வெளிப்படையாக பேசிய ஸ்ருதி ஹாசன்!

திருமணம் எப்போது? : வெளிப்படையாக பேசிய ஸ்ருதி ஹாசன்!
  • PublishedMay 2, 2023

80களில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் காதலனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஸ்ருதியிடம் திருமணம் செய்து கொள்வீர்களா என்ற கேள்வி எழுப்பிய போது அனைவரும் வாயடைக்கும் வகையில் பதில் கூறி இருக்கிறார்.

ஏனென்றால் நடிகையாக இருந்தாலும் அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி சோசியல் மீடியாவில் வெளிப்படையாக போட்டு உடைத்து விடுவார்.

அதையெல்லாம் பொருட்படுத்தாதவர்களை மட்டுமே தன்னுடைய பார்ட்னராகவும் வைத்துக் கொள்வார். அதுமட்டுமல்ல திருமணம் என்பது ஒரு கட்டமைப்பு தான்.

அதற்கென்று ஒரு மதிப்பு மரியாதை இருக்கிறது. நிச்சயம் அதற்கு புரிதல் அவசியம். தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஸ்ருதி-க்கு அவருடைய பார்ட்னர் உடன் திருமணம் நடந்தாலும் ஓகே இல்லை என்றாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்.

இவர் சமூக வலைதளங்களில் தன்னுடைய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அசால்டாக பதிவிடுபவர். இதைப் பற்றிய பல கேள்விகளுக்கு அவர் வெளிப்படையாக மீடியாவிலும் பதில் சொல்லி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *