அவனை எல்லாம் ஏன் வளர்த்து விடுற…..! : விவேக்கிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட வடிவேலு!

 அவனை எல்லாம் ஏன் வளர்த்து விடுற…..! : விவேக்கிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட வடிவேலு!
  • PublishedMay 18, 2023

நடிகர்  வடிவேலு எப்போதும் தனக்கு அடிமையாக ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என நினைப்பவர். தற்போது இவர் மீது பல விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் விவேக் உடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த நடிகர் கொட்டாச்சி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து இருக்கிறார்.

அதாவது ஒருமுறை வடிவேலு விவேக்குக்கு போன் செய்து கொட்டாட்சியை எதற்கு நீ வளர்த்து விடுகிறாய். அவனவன் கஷ்டப்பட்டு முன்னேறட்டும் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு விவேக் சினிமாவை பொறுத்தவரை எப்ப வாய்ப்பு வரும்,  வராது என்று சொல்ல முடியாது. அது நம்ம கையில் கிடையாது.  அதனால நம்ம பண்றத பண்ணுவோம் என்று கூறி வடிவேலுவின் வாயை அடைத்திருக்கிறார்.

அந்த வகையில் கெட்ட எண்ணத்தோடு தூபம் போட்ட வடிவேலுக்கு நோஸ் கட் தான் கிடைத்திருக்கிறது. இந்த விஷயத்தை இப்போது கொட்டாச்சி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அவனை எல்லாம் ஏன் வளர்த்து விடுற…………., அவனவன் கஷ்டப்பட்டு வளரட்டும் என விவேக்கிடம் கூறி சரியான பதிலடியையும் வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *