”நீங்க இதுக்கு செட்டாக மாட்டீங்க” : தன்னை பற்றி விமர்சனத்திற்கு சரியான பதிலடி கொடுத்த அனுபாமா!
மலையாள படமான பிரேமம் படத்தில் அறிமுகமானவர் தான் அனுபமா பரமேஸ்வரன். மேலும் தமிழில் சில படங்களே நடித்துள்ள நிலையில், இவர் கதாநாயகிக்கான தகுதி இல்லை என விமர்சனம் செய்தவருக்கு சரியானா பதிலடி கொடுத்துள்ளார்.
அனுபமா பரமேஸ்வரனுக்கு தமிழில் வாய்ப்புகள் சரிவர இல்லாததால் தெலுங்கு, மலையாள படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
மேலும் ஆரம்ப காலத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என கூறிய இவர் தற்பொழுது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் நீங்கள் ஒன்றும் பெரிய கதாநாயகி இல்லை. அதனால் பிரமாண்டமான பிரபலங்களோடு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் கதாநாயகிக்கான தகுதி பெறவில்லை என விமர்சித்துள்ளார்.
அதற்கு பதிலடியாக ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் நான் கதாநாயகி அல்ல நான் நடிகை ரகம் என நேக்காக பதிலடி கொடுத்துள்ளார். இவரின் இத்தகைய புத்திசாலித்தனமான பதில் பலரின் பாராட்டை பெற்று தந்தது.