விஜய் தான் காரணம் – பிரபல இயக்குனரின் வெளிப்படையான பேச்சு.

விஜய் தான் காரணம் – பிரபல இயக்குனரின் வெளிப்படையான பேச்சு.
  • PublishedFebruary 28, 2026

இயக்குநர் மாரி செல்வராஜ் கடைசியாக பைசன் படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து தனுஷ் படத்தை இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த வகையில் ஒரு ரசிகனாக விஜய்யின் அரசியலை எப்படி பார்க்குறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

சினிமாவை நாம் கவனிக்க ஆரம்பித்த பிறகு அதில் யார் செல்வாக்கு நிறைந்தவர்கள், யார் அதிகம் ஈர்க்கக்கூடியவர்கள் என பார்த்து தான் அவரை நோக்கி நகர்வோம். அப்படி எனக்கு சின்ன வயதிலிருந்தே விஜய் மீது பெரிய ஈர்ப்பு உண்டு. சினிமாவுக்கு வருவதற்கு அவர் தான் காரணம்.

ஒரு ரசிகனாக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கென்று ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கிறது. அதை வைத்து தான் கலையை பயன்படுத்துகிறேன். அதனால் விஜய்யுடைய முழு அரசியல் தெரிந்த பிறகு எனக்கு ஒரு புரிதல் வரும். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் அந்த வகையில் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *