அனிருத் – ஆண்ட்ரியா பிரிவிற்கு காரணம் இதுதான்…

அனிருத் – ஆண்ட்ரியா பிரிவிற்கு காரணம் இதுதான்…
  • PublishedApril 8, 2024

தமிழ் சினிமாவில் 2011ல் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் அனிருத். இசைமைப்பாளர், பாடகர் என்று தற்போது தமிழ் படங்களை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார் அனிருத்.

தமிழ் மட்டுமல்ல தற்போது ஹிந்தியிலும் ஒரு கை பார்ப்போம் என கிளம்பியுள்ளார்.

ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசைமைத்து பல கோடி சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார்.

ஆரம்பத்தில் இருந்தே சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார் அனிருத். அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சுசி லீக்ஸ் மூலம் வெளியுலகத்திற்கு தெரியவந்தது.

இந்நிலையில் அவர் தனது காதலை பிரேக்கப் செய்ய என்ன காரணம் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் காப்பி வித் ரோஸ் நிகழ்ச்சியில் நடிகை நமீதாவுடன் அனிருத் கலந்து கொண்டார். அப்போது உங்கள் காதல் பற்றியும் பிரேக்கப் பற்றியும் திருநங்கை ரோஸ் கேள்வியாக கேட்டார்.

அதற்கு அனிருத், என்னுடைய முன்னாள் காதலி பெயர் ஆண்ட்ரியா என்றும், எனக்கு 19 வயது அவருக்கு 25 வயதாக இருக்கும் போது காதலித்தோம்.

அந்த 25 வயது தான் பிரேக்கப்பிற்கு காரணமாக இருந்தது. அது உண்மையான காதல் என்று சொல்ல முடியாது என்று அனிருத் வெளிப்படையாக கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *