காதல்.. கல்யாணம் வரை சென்று முடிந்து போன கோவை சரளாவின் வாழ்க்கை

காதல்.. கல்யாணம் வரை சென்று முடிந்து போன கோவை சரளாவின் வாழ்க்கை
  • PublishedApril 17, 2024

மனோரமாவுக்கு பிறகு தமிழ் சினிமா நம்பி இருக்கும் காமெடி நடிகை என்றால் நடிகை கோவை சரளா தான்.

90களின் காலகட்டத்தில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து படம் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

கோவை சரளா திருமணம் செய்யாமல் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு காதல் கசப்பு தான் இதற்கு காரணம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது உண்டு. இதை பற்றி அவருடன் பணிபுரிந்த இயக்குனர் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, வரவு எட்டணா செலவு பத்தணா, விரலுக்கேத்த வீக்கம் போன்ற குடும்ப படங்களை எடுத்து பிரபலமானவர்தான் இயக்குனர் வி சேகர். இவருடைய படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக இருந்தவர்கள்தான் கோவை சரளா மற்றும் வடிவேலு.

இந்த இரண்டு பேரின் கெமிஸ்ட்ரியின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எல்லா படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன. கோவை சரளாவும் வடிவேலு இருந்தாலே படம் ஹிட் தான் என நம்பப்பட்டது. ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை.

இதற்கு இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பு தான் காரணம் என சொல்லப்படுகிறது. முதலில் வடிவேலுவுடன் நடிப்பதற்கு கோவை சரளா சம்மதிக்கவே இல்லை.

அதன் பின்னர் தொட்டு நடிக்க கூடாது, சில வசனங்கள் பேச கூடாது என நிறைய கண்டிஷன் போட்டு தான் நடித்திருக்கிறார்.

ஆனால் காலம் போகப் போக இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நட்பு. காதலாகவும் மாறி இருக்கிறது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்ததாக இயக்குனர் சேகர் சொல்லி இருக்கிறார்.

ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்காமல் போனது. அத்தோடு இவர்கள் இணைந்து நடிப்பதையும் நிறுத்திக் கொண்டார்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *